Posts Tagged mango
மாங்காய் இனிப்பு ஊறுகாய்
மாங்காய் இனிப்பு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மாங்காய் (medium size) 5 அல்லது 6
சர்க்கரை – 1 கிலோ
சீரகப் பொடி (வறுத்து அரைத்தது) – 1 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
- மாங்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
- இதை ஒரு வாய் அகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு, உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- 8 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். நன்றாக த்ண்ணீர் விட்டுக்கொள்ளும்.
- பாத்திரத்தை மறுநாள் காலையில் நல்ல வெயிலில் வைக்கவும். மெல்லிய துணியால் மூடி வைக்கலாம்.
- 6, 7 நாட்கள் இதுபோன்று தினமும் வெயிலில் வைத்து எடுத்தால், சர்க்கரை பாகு போல வந்து கெட்டியாகி விடும்.
- அதில் சீரகப்பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து, நன்கு கலந்து, பாட்டிலில் போட்டு உபயோகிக்கவும்.
விஜயா
25 மே 2008.
Add comment Sunday,May 25, 2008