Posts Tagged Palak

பாலக் சூப் (2)

பாலக் சூப் – 2

தேவையான் பொருட்கள்

பாலக் கீரை – ஒரு கட்டு (மீடியம் சைஸ்); வெங்காயம் 1, பால் – 200 மில்லி, மிளகு, ஜீரகம் கொஞ்சம், மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய்

செய்முறை

கீரையை ஆய்ந்து, நன்றாக அலம்பி, நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், கொஞ்சம் மிளகு, ஜீரகம் போட்டு வதக்கிக் கொண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

இதில் மைதா மாவு, மற்றும் பாலை சேர்த்து கொஞ்சம் கெட்டியாகும் வரை கிளறவும். ஆற விடவும்.

கலவையும், கீரையும் ஆறியவுடன் இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

இந்த விழுதை வாணலியில் போட்டு,  தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பாலக் சூப் ரெடி.

இது சுபா தயாரிப்பு

14-3-2009 11:10 am

Add comment Saturday,March 14, 2009

பாலக் பனீர் (2)

பாலக் பனீர்.

தேவையான பொருட்கள்

பாலக் கீரை – 3 கட்டுகள், சுத்தப்படுத்தி, அலம்பி, நறுக்கியது
பனீர் – 100 கி
வெங்காயம் – 1
வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 3 அல் 4
ஜீரகம் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
பூண்டு – இஞ்சி விழுது 3/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

பாலக் கீரையுடன், பூண்டு இஞ்சி விழுது, மிளகாய் விழுது சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.
இந்தக் கலவையை குக்கரில் போட்டு, 7-8 நிமிஷம் வேக விடவும்.
ஆறியபின், மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பனீரை துண்டங்களாக (cubes) நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு, பனீர் துண்டங்களை பொரிக்கவும்.
இன்னொரு வாணலியில், வெண்ணெயை உருக்கி ஜீரகத்தையும், பிரிஞ்சி இலையையும் வதக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலா சேர்க்கவும்.
பொரித்த பனீரையும், பாலக் கீரைவிழுதையும் போட்டு கொஞ்சம் கொதிக்க விடவும்.

ராஜப்பா 24-01-2009

Add comment Saturday,January 24, 2009

பாலக் பனீர் (1)

பாலக் பனீர்

தேவையான பொருட்கள்.

பாலக் கீரை – 2 கட்டு, சுத்தப்படுத்தி, நறுக்கியது
பனீர் – 100 கி
பூண்டு – 1 நசுக்கியது
1/2 டீஸ்பூன் இஞ்சி, துருவியது
பச்சை மிளகாய் – 2 நசுக்கியது.
1/4 டீஸ்பூன் ஜீரகம்
சர்க்கரை 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி
லவங்கப்பட்டை பொடி
பெருங்காயம்
கரம் மசாலாத்தூள்
உப்பு
எலுமிச்சம் பழச் சாறு, கொஞ்சம்

செய்முறை

பாலக் கீரையை நன்கு அலம்பிக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணீரில் கீரையை வேக விடவும்.
தண்ணீரை இருத்துவிட்டு, ஆறியபின், கோதுமை மாவு, இஞ்சி, பூண்டு, ப.மிளகாயுடன் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி, ஜீரகத்தை லேசாக வறுக்கவும்.
கீரை விழுதையும்,பெருங்காயத்தையும் சேர்ககவும்.
பனீரைத் தவிர மற்ற எல்லா மசாலாவையும் சேர்க்கவும்
வாணலியை மூடி, 3-4 நிமிஷம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
பனீரை சேர்த்து, லேசாக கலக்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
மேலும் 2 நிமிஷம் கொதித்தவுடன், இறக்கவும்.

ராஜப்பா 24-01-2009

Add comment Saturday,January 24, 2009

பாலக் சூப்

Palak  Soup

பாலக் கீரையை அலம்பி, நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 1/2 கப் தண்ணீர், பச்சை மிளகாய்,  இஞ்சி இவைகளையும் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய்யை சூடாக்கி, ஜீரகம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவைகளை தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன், அரைத்த மசாலா, கீரை விழுதை சேர்க்கவும். உப்பு போட்டு 10 – 15 நிமிஷங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்க விடவும். மிளகுத்தூள் சேர்க்கவும்.

rajappa

02-10-2006

Add comment Monday,October 2, 2006


Recent Posts

முந்திய இடுகைகள்

a

குறியீடுகள்

Arun brinjal Capsicum channa drumstick Ganesh maakali mango Methi mirchi bajji moong dal morekkali Palaakkai Palak paneer pickle Poosani Rajappa Rajma Ramesh sprouts Subha tomato usal vadai curry Vasu Vijaya உருளை கொத்தவரங்காய் தக்காளி நெல்லிக்காய் பட்டாணி பாகற்காய் பூண்டு மாகாளி முருங்கை முளைக்கீரை

என் மற்ற வலைமனைகள்