Posts Tagged tomato
தக்காளி சாதம்
Add comment Thursday,March 12, 2009
தக்காளி சாதம்
தக்காளி சாதம் (1)
தேவையான பொருட்கள்
அரிசி – 300 கிராம், தக்காளி – மீடியம் சைஸ் 6, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 15 பற்கள், இஞ்சி, கிராம்பு – 4, பட்டை, ஏலக்காய் – 2, வெண்ணெய் – 25 கிராம், கொத்தமல்லித் தழை
செய்முறை
அரிசியை நன்றாக அலம்பி, களைந்து கொள்ளவும். தண்ணீரை இருத்துவிட்டு, அரிசியை 10 நிமிஷம் உலர்த்திக் கொள்ளவும்.
இஞ்சி, 5 பற்கள் பூண்டு, ப-மிளகாய் இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் போட்டு, சூடானதும் அதில் பொடித்த கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவைகளைப் போட்டு, வறுக்கவும். நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் இஞ்சி பூண்டு மிளகாய் விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
களைந்து, உலர்த்திய அரிசியை போட்டு கொஞ்சம் வறுத்துக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து, அரிசியில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். (ஏற்கனவே தக்காளி சாறு ஊற்றியிருப்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு தண்ணீர் சேர்க்கவும்). உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி, 3 விசில் வரும்வரை சாதத்தை வேகவிடவும். குக்கர் ஆறியதும், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி சாதத்தில் சேர்க்கவும்.
இது ராஜப்பா தயாரிப்பு
11 March 2009
Add comment Wednesday,March 11, 2009
Aloo Dhum
ALOO DHUM
பொருட்கள்
சின்ன உருளை – 4, தக்காளி – 2, வரமிளகாய் – 4, வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பொடித்த ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன் தலா
உப்பு, எண்ணெய்
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து, தோல் உரித்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, வரமிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெந்த உ.கிழங்கில் FORK கொண்டு துளையிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய், கிராம்பு போட்டு வதக்கவும்.
மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அதில் அரைத்த விழுதை போட்டுக் கிளறவும்.
வெந்த உ.கிழங்கை போட்டு வதக்கவும்.
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
நன்றாக கொதித்ததும் கொத்துமல்லி போட்டு இறக்கவும்
ராஜப்பா
25-01-2009, 17:50 மணி
** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து
Add comment Sunday,January 25, 2009
Green Peas Masala
Green Peas Masala
பொருட்கள்
பச்சை பட்டாணி – 2 கப், வெங்காயம் – 2, சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்
உப்பு – தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய், நெய் – 1 டீஸ்பூன் தலா.
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை தனித்தனியே நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், சீரகத்தை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து, வதக்கி, ஒரு கப் தண்ணீர் விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
பட்டாணி நன்றாக வெந்து க்ரேவியாக வந்ததும் இறக்கி, பரிமாறவும்
ராஜப்பா
25-01-2009, 17:25 PM
** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து
1 comment Sunday,January 25, 2009
Paneer butter Masala
பனீர் பட்டர் மசாலா
பொருட்கள்
பனீர் – 200 கி, வெண்ணெய் – 1 டேஸ்பூன், தக்காளி – 3
வெங்காயம் – 2, முந்திரி – 5-8, கசகசா – 1 டீஸ்பூன்,
வெந்தயக்கீரை (காய்ந்தது) – 1 டீஸ்பூன் (கீரையை தண்ணீரில் ஊறவைக்கவும்)
பால் – 1/2 கப், எண்ணெய், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள்,
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் – தலா 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 சிட்டிகை, உப்பு
அரைக்க: இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய்
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய தக்காளியை அரைத்துக் கொள்ளவும்
முந்திரி, கசகசா, மேதி மூன்றையும் அரைத்துக் கொள்ளவும்
மசாலா பொருட்களையும் அரைத்துக் கொள்ளவும்
பனீரை சிறு துண்டங்களாக் பொரித்துக் கொள்ளவும்
கடாயில் வெண்ணெய் போட்டு சூடானதும், வெங்காயம் போட்டு வதக்கவும்
அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி விழுது, உப்பு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்ததும், பாலை சேர்க்கவும்,
முந்திரி விழுதை சேர்த்து, பொரித்த பனீரையும் போடவும்.
கொஞ்சம் கொதித்ததும் இறக்கி, பரிமாறவும்
ராஜப்பா
25-01-2009 17:00 PM
** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து
Add comment Sunday,January 25, 2009
Tomato Cream soup
TOMATO CREAM SOUP
1 Kg tomatoes
1-1/2 tsp butter
Chopped garlic (3 tsps)
A small piece of ginger chopped
1/2 tsp green chilli chopped
Coriander leaves chopped (handful)
Tulsi leaves (for taste)
1 tbsp light cream
Salt as per taste
Method:
Puree the tomatoes and keep aside.
Heat a vessel on medium flame.
Add butter and then add chopped garlic, chopped ginger, chilli and coriander
leaves and saute until it emits a nice aroma.
Add the pureed tomatoes and let it simmer.
Add some water if required.
Now add tulsi leaves and salt according to taste.
When it boils, remove the vessel from the stove and let the soup cool.
Strain the soup.
Take the strained soup, keep on medium flame again, add cream to it, and let
simmer for sometime.
Delicious cream of tomato soup is ready.
Rajappa
25-01-2009 11:25 am
Add comment Sunday,January 25, 2009
Thideer soup
திடீர் சூப்
தக்காளி — 3 பெரியது
லவங்கப்பட்டை தூள் – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேஸ்பூன்
உப்பு
மிளகாய்த்தூள் (தேவையானால்) – கொஞ்சம்
வெண்ணெய் – 2 டேஸ்பூன்
சீரகப்பொடி – 1/2 டேஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப் (தேவையானால்)
செய்முறை
தக்காளியை கொதிக்கவிட்டு, தோல் உரித்துக் கொள்ளவும்.
இதை மற்ற சாமான்களுடன் சேர்த்து (வெண்ணெயைத் தவிர) விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு, அரைத்த விழுதை போட்டு குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
தண்ணீர் தேவையானால் சேர்க்கவும்.
சூப்பை சூடாக பரிமாறவும்.
ராஜப்பா
25-01-2009 11-15 மணி
Add comment Sunday,January 25, 2009
காய்கறி சூப் (2)
VEGETABLE SOUP
potatoes – 2 medium size
carrots – 2 medium size
onions – 2 medium size
beans – 10 nos
cabbage – 1 piece (100 gms approx.)
shelled green peas – 1 cup
celery – 3 stalks
vegetable stock – 1 ltr
skimmed milk – 250 ml
salt & pepper to taste
Method:
Cut all the vegetables (except peas) into small cubes and mix with peas.
Add stock and pressure cook for 10 minutes.
Strain out 1 cup of cooked vegetables and blend in a mixer.
Return it to the soup in the pressure cooker.
Add milk, salt and pepper. Serve hot
rajappa
25-01-2009 11:05
Add comment Sunday,January 25, 2009
காய்கறி சூப்
காய்கறி சூப்
தேவையான பொருட்கள்
காரட் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
சிறிய சைஸ் உருளைக்கிழங்கு – 1 நறுக்கியது
தண்ணீர் – 2 கப்
பூண்டு – 1 நசுக்கியது
ஆரஞ்சுப்பழ சாறு – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை-பொடி – 1/2 டீஸ்பூன்
தக்காளிக் கூழ் 1 டேபிள்ஸ்பூன்
ஸ்கிம் பால் – 1 கப்
ஸ்பிரிங் ஆனியன் – 1 டேஸ்பூன் நறுக்கியது
வெண்ணெய் — 1/2 டீஸ்பூன்
உப்பு
செய்முறை
காய்கறிகளை (வெங்காயம், உருளை, காரட், பூண்டு) குறைந்த தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.
ஆரஞ்சு சாறு, கறிவேப்பிலை பொடி, தக்காளி கூழ், பால் சேர்க்கவும்.
மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
வெண்ணையை சூடு பண்ணி, ஸ்பிரிங் ஆனியனை போட்டு கிளறவும்.
அரைத்த விழுதைப் போட்டு, கொதிக்க விடவும்.
சூப்பை சூடாகப் பரிமாறவும்.
ராஜப்பா
25–01-2009 11 மணி
Add comment Sunday,January 25, 2009
பூண்டுக் குழம்பு
பூண்டுக் குழம்பு
பூண்டு, புளி – தலா 200 கிராம்
சின்ன வெப்க்காயம் – 100 கி
பெரிய வெங்காயம், தக்காளி – தலா 150 கி (பொடிசாக நறுக்கியது)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
சீரகம், மிளகுத்தூள் – தலா 50 கி (7 – 8 டீஸ்பூன்)
உப்பு, ந எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும்.
நஎண்ணெயை காய வைத்து, பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து 2 நிமிஷம் வதக்கவும்.
இதில் சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து புளியை கெட்டியாக கரைத்து விட்டு, 10 நிமிஷம் கொதிக்கவிடவும்.
எண்ணெய் மேலாக பிரிந்து வரும்போது இறக்கி, கறிவேப்பிலை போடவும்
** நன்றி – ஆனந்தவிகடன் 07-01-2009 இதழ்
Add comment Friday,January 9, 2009
தக்காளி தோசை
தக்காளி தோசை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 1/2 கிலோ
பச்சரிசி – 100 கி
மிளகாய் வற்றல் – தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி - சிறிதளவு
பூண்டு – 20
தக்காளி – 1/2 கிலோ
கொத்து மல்லி – 1 கட்டு
உப்பு – தேவைக்கேற்ப
கெட்டித்தயிர் – 1/2 லிட்டர்
பெரிய வெங்காயம் – 1/4 கிலோ
கடுகு, கடலைப் பருப்பு, உ. பருப்பு – தாளிக்க
எண்ணெய் – 1/4 லிட்டர்
செய்முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும். முக்கால் பதம் வந்ததும் தக்காளியை நறுக்கி, மாவுடன் சேர்த்து அரைத்து உப்பு சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இவற்றை கடுகு, உ.பருப்பு, கடலை பருப்புடன் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து மாவுடன் கலந்து கொள்ளவும்.
கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இவற்றையும் மாவுடன் சேர்த்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
___ நன்றி :: மங்கையர் மலர், ஆகஸ்ட் 2008
Add comment Sunday,August 3, 2008
KHUSHKA
Khushka
Ingredients
1. Any raw rice (I prefer sona masoori) - 2 cups ( 300 Gms)
2. Onion (cut lengthwise) - 2 medium size
3. Tomato (chop finely) - 2 medium size
4. Injhi Paste - 1 Tablespoon
5. Poondu Paste - 1 Tablespoon
6. Pudhina leaves - One handful
7. Grambu - 3 to 4 pcs
8. Pattai - 2 pcs of 2 cm long
9. Bay leaves - 2 to 3 leaves
10. Pachchai Milagai ( Don’t cut , only slit) - 2 to 3
11. Oil - 4 tablespoon
12. Salt - as per taste
13. Food color (orange color) - 1 sittigai
14. Water - as per need
Method
1. Heat oil in a vanali
2. Add bay leaves, grambu & pattai – one by one & fry
3. Remove grambu & pattai from vanali
4. Add onion and fry till it becomes soft - 2 minutes
5. Add Injhi & Poondu paste & fry till the raw smell goes – 5 minutes
6. Add Pudhina leaves & continue frying – 2 minutes
7. Add finely chopped tomatoes & fry for 4 more minutes
8. Add pachchai milagai – and fry for 1 minute
9. Now add salt ( remember to add for the rice also)
10. Now remove the vanali from fire & mix the rice thoroughly with the masala cooked
11. Add the fried pattai & grambu to the mix
12. Transfer the contents to a pressure cooker
13. Add sufficient water ; add the food color , mix well and close the lid
14. Cook till it becomes OK ( 1 or 2 whistles is OK)
15. This is to be served hot with Onion raitha
Note : Those who opt for KARAM ( spicy ) may add 2 more green chillies or a teaspoon of Sigappu milagai podi
Ramesh on 27 June 2008
Add comment Sunday,June 29, 2008