Posts Tagged Vijaya
மாங்காய் இனிப்பு ஊறுகாய்
மாங்காய் இனிப்பு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மாங்காய் (medium size) 5 அல்லது 6
சர்க்கரை – 1 கிலோ
சீரகப் பொடி (வறுத்து அரைத்தது) – 1 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
- மாங்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
- இதை ஒரு வாய் அகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு, உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- 8 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். நன்றாக த்ண்ணீர் விட்டுக்கொள்ளும்.
- பாத்திரத்தை மறுநாள் காலையில் நல்ல வெயிலில் வைக்கவும். மெல்லிய துணியால் மூடி வைக்கலாம்.
- 6, 7 நாட்கள் இதுபோன்று தினமும் வெயிலில் வைத்து எடுத்தால், சர்க்கரை பாகு போல வந்து கெட்டியாகி விடும்.
- அதில் சீரகப்பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து, நன்கு கலந்து, பாட்டிலில் போட்டு உபயோகிக்கவும்.
விஜயா
25 மே 2008.
Add comment Sunday,May 25, 2008
Mysore Rasam
மைசூர் ரசம்
GRIND TOGETHER : தனியா 2 டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டீஸ்பூன், ஜீரகம் 1/4 டீஸ்பூன், மிளகு 1/4 டீஸ்பூன், வரமிளகாய் 5-6, இவற்றை நெய்யில் வறுத்துக் கொண்டு, அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிநீரில் போட்டு நசுக்கிக் கொள்ளவும். சிறிதளவு புளியை நீரில் கரைத்து சாறு எடுத்துக் கொண்டு, புளிச்சாற்றில் தக்காளியை சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் ஆகியவைகளை மசாலா விழுதுடன் சேர்த்து, புளித்தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். கொதித்தவுடன், (வேகவைத்து, மசித்த) துவரம்பருப்பை நீர் விட்டு இதில் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கருவேப்பிலை சேர்த்து, நெய்யில் கடுகு தாளித்து கொட்டவும்.
ராஜப்பா (விஜயா) 29 – 10 – 2007
Add comment Monday,October 29, 2007